அணித்தலைவர் பதவியிலிருந்து மிஸ்பாவை நீக்கவேண்டும் : ரமீஸ் ராஜா!!

286

misbh

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹராரேயில் நடந்த டெஸ்டில் சிம்பாவே அணியிடம் தோற்றது. கடைசியாக பாகிஸ்தான் அணியை சிம்பாவேயிடம் 1998ம் ஆண்டு தோற்று இருந்தது.

பலவீனமான சிம்பாவே அணியிடம் பாகிஸ்தான் தோற்றதால் அணித்தலைவர் மிஸ்பா அல் ஹக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அணித்தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் 39 வயதான மிஸ்பாவின் செயல்பாடில் திருப்தி இல்லை. அணியை வழி நடத்தக்கூடிய புதியவர் தேவை.
இதனால் மிஸ்பாவை அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுவே அதற்கு சரியான நேரம்.

என்னை பொறுத்தவரை மிஸ்பாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக கருதுகிறேன் என்றும் தென் ஆபிரிக்க பயணத்திற்கு புதிய அணித்தலைவரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மற்றொரு முன்னாள் அணித்தலைவர் அமீர் சோகைல் கூறுகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். உள்ளூர் போட்டியில் இருந்து சிறந்த வீரர்களை உருவாக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தவறிவிட்டது என்றார்.

முன்னாள் வேகப்பந்து வீரர் சொயிப் அக்தர் கூறுகையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து வட்மோரை நீக்க வேண்டும். சிம்பாவே அணியிடம் தோற்றதற்கு பாகிஸ்தான் அணியின் மோசமான துடுப்பாட்டமே காரணம் என்றும் அணியின் இந்த மோசமான நிலைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையே காரணம் எனவும் கூறினார்.