உலகின் 58 சதவீத சொத்துக்கள் 8 கோடீஸ்வரர்களின் கையில்!!

548

சர்வதேச பொருளாதார அமைப்பின் தொடக்க விழா இங்கிலாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உலக அளவில் உள்ள சொத்துக்களில் பாதியளவு 8 கோடீஸ்வரர்களின் கைகளில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் 6 பேர் அமெரிக்க வர்த்தகர்கள், ஒருவர் ஸ்பெயின் மற்றையவர் மெக்சிகோவைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டது.
இந்த 8 பேரில் முதலிடத்தில் இருப்பவர் அமெரிக்காவின் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். அவரது சொத்து மதிப்பு 743 கோடி டொலர்களாகும்.

அவரைத் தொடர்ந்து ஸ்பெயினின் அமான்சியோ ஆர்டேகா சொத்து மதிப்பு (663 கோடி டொலர்கள்) 2 ஆவது இடத்திலும், அமெரிக்காவின் வாசன் பப்பெட் (602 கோடி டொலர்கள்) 3 ஆவது இடத்திலும், மெக்சிகோவின் கார்லஸ் ஸ்லிம் ஹீலு (494 கோடி டொலர்கள்) 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் டாட் காம் தலைவர் ஜெய் பெஷோஸ் (448 கோடி டொலர்கள்), 5 ஆவது இடத்திலும், பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஷக்கர்பெர்க் (441 கோடி டொலர்கள்) 6 ஆவது இடத்திலும், ஒரகில் தலைமை அதிகாரி லார்ரி எல்லிசன் (412 கோடி டொலர்கள்) 7 ஆவது இடத்திலும், நியூயோர்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம் பெர்க் (396 கோடி டொலர்கள்) 8 ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதனால் உலக பொருளாதாரத்தில் சமநிலை இல்லாத சூழ்நிலை ஏற்படும் என உலக பொருளாதார அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.