இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கரின் மனிதாபிமானம்!!

463

 
இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க பிரஜை ஒருவர் வறுமையின் கீழ் இயங்கி வந்த பாடசாலைக்கு உதவிகளை செய்துள்ளார்.

தனது விடுமுறையைக் கழிக்கும் சீகிரியாவுக்கு சென்றுள்ள இவர் சீகிரிய உடவெலயாகம கனிஷ்ட பாடசாலைக்கு சென்று நிறப்பூச்சு பூசியதோடு வெண்பலகைகளையும் வழங்கியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் என்பவரே இவ்வாறு மாணவர்களுக்கு உதவிகளை செய்துள்ளார்.

தனது சொந்த செலவில் பாடசாலை கட்டடத்துக்கு தாமே நிறப்பூச்சு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, “எனது சுற்றுலாப்பயணத்தை விட இதுவே எனக்கு முக்கியம்” என டேவிட் தெரிவித்துள்ளார்.

பின்னர் பாடசாலை மாணவர்களுடன் தனது பொழுதினையும் செலவிட்டுள்ளார். அவரின் இந்த நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.