விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயம்!!

704

கம்பஹா Ihalagama பிரதேசத்தில் உள்ள 15 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக் கிழமை காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன தினத்தன்று குறித்த சிறுவன், சிவப்பு நிற மேல் சட்டையும், பழுப்பு நிற கால்சட்டையும் அணிந்திருந்தார் என சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த சிறுவனுக்கு நெற்றியில் கரும் புள்ளிகள் இருப்பதாகவும் அவரது பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

சிறுவனைப் பற்றி ஏதாவது தகவலும் கிடைக்கப் பெற்றால் பொலிஸ் அவசர தொலைப்பேசி எண்ணிற்கு அழைப்பினை மேற்கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அல்லது சிறுவனின் தந்தையின் தொலைபேசி அழைப்பிற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவிக்கலாம் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தந்தையின் தொலைபேசி எண்-077-9615745.