நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசியப் பாடசாலை மாணவனான ஆதம்பாவா முஹம்மது அல்-அஸீம், பாவனைக்கு உதவாத முச்சக்கர வண்டி ஒன்றின் இயந்திரமொன்றை கொள்வனவு செய்து, தனது தொழில்நுட்ப திறனை பயன்டுத்தி அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்றை தயாரித்துள்ளார்.
தரம் 13 பொறியியல் முறைமை தொழில்நுட்பவியல் பிரிவில் கல்வி கற்கும் ஆதம்பாவா முஹம்மது அல்-அஸீமின் செயற்பாட்டை பாடசாலை சமூகத்தினர் பாராட்டியுள்ளனர்.
அவருக்கான பாராட்டு வைபவம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் அல் – அஷ்ரக் தேசியப் பாடசாலை அதிபர் மற்றும் பிரதேச கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டு இம்மாணவனை பாராட்டினர்.