மும்பை பட விழாவில் கமலஹாசனுக்கு சாதனையாளர் விருது!!

445

Kamal-Haasan

கமலஹாசனுக்கு மும்பை திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

கமலஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.1959 முதல் இன்றுவரை நூற்றுக்கணக்கான படங்களில் வெவ்வேறு கேரக்டர்களில் நடித்து உலக நாயகனாக போற்றப்படுகிறார்.

கமலஹாசனை மும்பை பட விழாவில் கௌரவிக்க முடிவு செய்துள்ளனர். இவ்விழா இன்று(17) ஆரம்பமாகி 24ம் திகதி வரை நடக்கிறது. மராட்டிய அரசின் பண்பாட்டுத்துறை உதவியோடு நடத்தப்படுகிறது. இவ்விழாவில் கமலஹானுக்கு சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.



மூன்றாம் பிறை, நாயக், புஷ்பக், அப்பு ராஜா, ஹேராம் போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.