சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி முருகன், கயல்விழி, பகத்சிங் ஆகிய 3 சட்டத்தரணிகள் திங்கள்கிழமை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
உயர் நீதிமன்றத்தில் உள்ள சட்டத்தரணிகள் சங்கம் முன்பு அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். தமிழை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும என்று அவர்கள் தெரிவித்தனர்.