பூமியல் பல்லாயிரக்கணக்கான வகையான உயிரினங்கள் காணப்படுகின்றது. எனினும் அவற்றுள் சில இதுவரை இனங்காணப்படாமல் இருப்பதுடன், மேலும் சில அழிவடைந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்து சில உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கஸ்பின் எனும் புலி இனத்தை மீண்டும் உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த இனமானது சுமார் 50 வருடங்களுக்க முன்னர், அதாவது 1960ம் ஆண்டு காலப்பகுதியில் முற்றாக அழிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஸ்பின் இன புலிகள் துருக்கியிலுள்ள காட்டுப் பகுதியில் அதிகமாக காணப்பட்ட போதிலும் மத்திய ஆசிய நாடுகளிலுள்ள காடுகளிலும் காணப்பட்டுள்ளது.
இவை சைபீரியன் இன புலிகளை ஒத்ததாக இருக்கின்றமையினால் அவற்றினைப் பயன்படுத்தி மீண்டும் உருவாக்கிக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை கஸ்பின் இன புலிகள் 240 கிலோ கிராம்கள் வரையில் எடையினைக் கொண்டிருப்பதுடன், 10 அடிகள் நீளம் வரை வளரக்கூடியன.
இது தற்போது உள்ள புலி இனங்களை விடவும் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.