சுவிஸ்லாந்தில் செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப முறையில் குழந்தைகளின் பிறப்பு விகிதமானது அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 6321 பெண்கள் இந்த செயற்கை முறையினை பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
புள்ளிவிபரப்படி43 சதவீத ஆண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவதால் பெண்கள் வேறு ஒரு நபரின் விந்துவின் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். வருடத்திற்கு 2000 குழந்தைகள் சோதனை குழாய் முறையில் பிறக்கின்றனர்.
இதனையும் தவிர்த்து இன்னொரு தொழில்நுட்பமானது இன்ட்ரோசைட்டோபிளாஸ்மிக் (intracytoplasmic) அதாவது ஒரு ஊசியின் மூலம் செயல்படும் தொழில்நுட்பமாகும். இதில் ஒரு விந்துவினை ஊசியின் வழியாக நேரடியான முறையில் அண்டத்திற்கு செலுத்துவதாகும்.
இதன் மூலம் 80 சதவீதம் அதாவது 10827 இனப்பெருக்க சிகிச்சைகள் சுவிஸ்லாந்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த1990ம் ஆண்டு ஆரம்பம் முதல் இந்த முறையானது அதிகமான மக்களால் பின்பற்றப்பட்டது.
பெண்களால்19 முதல் 51 வயது வரை செயற்கைமுறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.