பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்தானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது.
இதில் புதிதாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் நிமித்தம் அதிக போக்குவரத்து நெருக்கடிகள்,பாதுகாப்பு கெடுபிடிகள் போன்றன காணப்படும் என்பதுடன், ஹோட்டல் அறைகளை பதிவு செய்துக் கொள்வதிலும் சிக்கல் காணப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட பயண அறிவுறுத்தலில் காணப்பட்ட இலங்கையில் இயக்கும் கடத்தல்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்கள் மற்றும் மதங்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய வெளிவிகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு புதிய பயண எச்சரிக்கையை நீக்குமாறு கோரி இருந்தது. எனினும் இந்த முறையும் இந்த பயண எச்சரிக்கை மாற்றம் இன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.