17 வயது பெண்ணை பாலாத்காரத்திற்கு உட்படுத்தி அலுமாரியின் அடைத்த அயலவர்!!

482

abuse

கர்நாடகாவில் 17 வயது இளம்பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்தி மயங்கிய அவரை அலுமாரியில் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர் இந்தப்பெண். இந்தப் பெண் தினமும் தனது சின்னம்மா வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கமாம். அதேபோல் நேற்று முந்தினமும் இரவு 10.30 மணியளவில் இவர் சித்தி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

சித்தி வீட்டுக்கு அருகே நாகேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். அவர் கூலி தொழிலாளி. ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர் இந்தப் பெண்ணை வழிமறித்து வாயில் துணியைத் திணித்து தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்.



பின்னர் அவரை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். மயங்கிய பெண்ணை அலுமாரியில் வைத்துப் பூட்டியுள்ளார் நாகேஷ்.
தினமும் வரும் பெண்ணைக் காணவில்லையே என்று சித்தி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து தேடத் தொடங்கினர். அப்போது நாகேஷ்தான் இரவில் நடமாடியதாக சிலர் தெரிவித்தனர்.

உறவினர்கள் நாகேசின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது அலுமாரியினுள் இருந்து தட்டும் சத்தம் கேட்டது. இதனால் அலுமாரியை திறக்கும்படி நாகேசிடம் அவர்கள் கூறினார்கள்.

ஆனால், அதற்கு மறுத்த நாகேஷ் சாவியை வெளியூருக்கு சென்று உள்ள தனது மனைவி கொண்டு சென்று விட்டதாக கூறினார். ஆனாலும், அவர்களுக்கு சந்தேகம் அதிகமானால் அலுமாரியின் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ரோஜா மிகவும் சோர்ந்து போய் இருந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு மாவட்ட அரசு வைத்தியசாலையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொலிசில் ரோஜாவின் சித்தி சாக்கம்மா முறைப்பாடு செய்தார். அதன்பேரில் நாகேஷ் மீது கடத்தல் மற்றும் பலாத்கார பிரிவுகளின் கீழ் பொலிஸ் வழக்கு பதிவு செய்தார்.

பின்னர் நாகேசை கைது செய்ய பொலிசார் பென்னிபுராமோளேவுக்கு சென்றனர். ஆனால், அதற்குள் நாகேஷ் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போபொலிசார் தேடி வருகிறார்கள்.