வன்முறையாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம், காவல்நிலையம், வாகனங்கள் தீவைப்பு!!

270

 

சென்னையில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு மர்மநபர்கள் தீவைத்துள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த ஒரு வாரகாலமாக அமைதியாக நடைபெற்ற போராட்டம் இன்று சென்னை உள்ளிட்ட தமிழகம் எங்கும் வன்முறையாக மாறி விட்டது. இதற்கு முக்கியக் காரணம் காவல்துறையினரின் திடீர் நடவடிக்கை.

மெரீனா கடற்கரை சாலைக்கு வரும் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டன. இதனையடுத்து பேரணியாக சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் போர்வையில் புகுந்த விஷமிகள் சிலர் காவல்துறையினர் மீது சிலர் கற்களை வீசவே, இதில் சில காவலர்கள் காயமடைந்தனர்.

இதனையடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த நிலையில் விவேகானந்தர் இல்லத்திற்கு பின்புறம் இருந்த ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர்.

இதில் தீ காவல் நிலையத்திற்குள் மளமளவென பரவியது. 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கண்ணாடியை உடைத்துக்கொண்டு சென்ற தீயணைப்பு வீரர்கள், காவல்நிலையத்திற்குள் இருந்த இரண்டு பெண் காவலர்களை மீட்டனர். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. மீண்டும் நடத்தினர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் சில தேவையில்லாத விஷமிகளால் வன்முறையாக மாறியுள்ளது.