கனடாவிற்குள் நுழைபவர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்!!

300

canada

இலங்கை உட்பட பல நாடுகளிலில் இருந்து வருகை தரும் பயணிகள் தொடர்பாக புதிய சட்டமொன்றினை இந்த ஆண்டின் இறுதியில் கனடா அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனேடிய ஊடகம் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த முறையின் கீழ் மாணவர் மற்றும் தொழிலாளர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, கைரேகை மற்றும் புகைப்படங்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்ட தொடக்கமாக ஒக்டோபர் 23ம் திகதி அல்பேனியா, அல்ஜீரியா, காங்கோ ஜனநாயக குடியரசு, எரித்திரியா, லிபியா, நைஜீரியா, சவுதி அரேபியா, சோமாலியா, தென் சூடான், சூடான் மற்றும் டுனீஷியா ஆகிய நாடுகளிலும் இறுதியாக டிசம்பர் 11ம் திகதி இலங்கையில் தொடங்கவுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் இந்த புள்ளியியல் மூலம் பிற நாடுகளில் இருவர் வருகை தந்து விசா இல்லாமல் தங்கியிருப்போர், அகதிகள், மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாமல் பிற நாடுகளில் தங்கியிருக்கும் மக்களின் விகிதங்களை கண்டு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கனடாவின் குடிவரவு முறைமை பாதுகாத்தலின் ஒரு பகுதியாக எல்லை நுழைவில் இறுக்கமான சட்டம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.