வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் வீதிச்சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!!

515

 
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இன்று (24.01.2017) வீதிச்சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சிவில் சமூக பொலிஸ் குழு மற்றும் போக்குவரத்து பொலிசாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது வன்னி மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நெறிப்படுத்தலில் நடைபெற்று வருவதுடன் இம்மாத இறுதிக்குள் கணேசபுரம் மற்றும் மறவன்குளம் பாடசாலைகளில் வீதிச்சட்டங்கள் தொடர்பான மாணவர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாணவர்களுக்கான வீதிச்சட்டங்கள் தொடர்பான விளக்கங்களை பொலிஸ் அதிகாரி எஸ்.ஜெயபிரகாஸ் வழங்கியதுடன், நிகழ்வில் சிவில் சமூக பொலிஸ் குழுவின் அதிகாரி கே.புஸ்பகுமார, போக்குவரத்து பொலிஸ் அதிகாரி எ.அசோக் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.