கடையில் திருடுவதற்காக புகுந்த திருடர்கள் பாலியல் பொம்மையைக் கண்டு பயந்தோடினர்!!

514

 
கலைப்­பொ­ருட்கள் விற்­பனை செய்­யப்­படும் கடை­யொ ன்றை உடைத்­துக்­கொண்டு உள்ளே புகுந்த திரு­டர்கள், அங்­கி­ருந்த பாலியல் பொம்­மையைப் பார்த்து பயந்­தோ­டிய சம்­பவம் பிரிட்­டனில் இடம்பெற்­றுள்­ளது.

ஓவி­ய­ரான டெரிக் தொம்சன் என்­பவர், இங்­கி­லாந்தின் மேற்கு சசெக்ஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள டேரிங் நகரில் கலைப்­பொ­ருட்கள் விற்­பனை நிலை­ய­மொன்றை நடத்தி வரு­கிறார்.

வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்ப்­ப­தற்­காக, பெண் போன்ற தோற்றம் கொண்ட பாலியல் பொம்மையொன்றையும் இவர் கடந்த வருடம் வாங்கி வைத்­தி­ருந்தார். ஷேலா எனப் பெய­ரி­டப்­பட்ட 6 அடி உய­ர­மான அந்த பொம்­மைக்கு விதம் வித­மான ஆடை அலங்­கா­ரங்­களைச் செய்து தனது கடையிலுள்ள ஆச­ன­மொன்றில் அமர வைத்­தி­ருந்தார் டெரிக் தொம்ஸன்.

இந்­நி­லையில், கடந்த 8 ஆம் திகதி இரவு மேற்­படி கடையில் திரு­டு­வ­தற்­காக உள்ளே புகுந்த திரு­டர்கள், அந்த பாலியல் பொம்­மையைக் கண்­ட­வுடன் பயந்­தோடி விட்­ட­னராம். கதி­ரையில் உண்­மை­யான பெண் ஒருவர் அமர்ந்­தி­ருக்­கிறார் என அவர்கள் எண்­ணி­ய­மையே இதற்­கான காரணம்.

திரு­டர்கள் சுமார் 1,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 185,000) ரூபா பெறு­ம­தி­யான பொருட்­களை திருடிச் சென்­ற­தா­கவும், “ஷேலா” இல்­லா­தி­ருந்தால் திரு­டர்கள் மேலும் பொருட்­களை திரு­டி­யி­ருக்­கக்­கூடும் எனவும் 42 வயதான டெரிக் தொம்சன் கூறியுள்ளார்.