ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு!!

586

ஹட்டன், செனன் பகுதியில் நேற்று (24.01.2017) மாலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று குறித்த பெண் மீது மோதி நேற்று (24) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.