ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டம் : மதுரை விமான நிலைய முட்கம்பி வேலிக்குள் புகுந்து விமானத்தை அடைந்த ஸ்ரீலங்கன் விமான ஊழியர்கள்!!

546

தமிழ்­நாட்டின் பல பகு­தி­களில் ஜல்­லிக்­கட்டுத் தடைக்கு எதி­ராக நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டங்கள் கார­ண­மாக, மதுரை விமான நிலை­யத்­தினுள் செல்­வ­தற்­கான பிர­தான வழி தடைப்­பட்­டி­ருந்ததால், ஸ்ரீலங்கன் விமான உத்­தி­யோ­கத்­தர்கள் விமான நிலை­யத்­தினுள் நுழைந்து கட­மைக்கு சமு­க­ம­ளித்த சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

தமிழ்­நாட்டின் பல்­வேறு பாகங்­க­ளிலும் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தின் கார­ண­மாக தமிழ்­நாட்டின் சில விமான நிலை­யங்­க­ளி­னூ­டான விமான பய­ணங்கள் தாம­த­மா­கின.

இந்­நி­லையில், மது­ரை­யி­ருந்து கொழும்பு நோக்கி பய­ண­மா­க­வி­ருந்த ஸ்ரீலங்கன் விமா­னத்தின் தலைமை விமா­னி­யான கெப்டன் அல்விஸ் மற்றும் விமான உத்­தி­யோ­கத்­தர்கள், தங்­க­ளுக்கு தங்­கு­வ­தற்­காக ஒழுங்கு செய்­து­கொ­டுக்­கப்­பட்­டுள்ள ஹோட்­டலில் இருந்து மதுரை விமான நிலையம் நோக்கிச் சென்­றனர்.

அதன்­போது ஆர்ப்­பாட்­டங்­களின் கார­ண­மாக வீதி­யெங்கும் பெரும் போக்­கு­வ­ரத்து நெருக்­கடி ஏற்­பட்­டி­ருந்­ததன் கார­ண­மாக விமான நிலை­யத்­துக்கு சென்ற பய­ணி­களும் வேறு சில விமான பணிக்­கு­ழு­வி­னரும் மீண்டும் தாம் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லுக்கு திரும்­பினர்.

எனினும் கடமை உணர்வு கொண்ட ஸ்ரீலங்கன் விமா­ன­சேவை பணிக்­கு­ழு­வினர் அவ்­வா­றான முடி­வெ­த­னையும் எடுக்­காது தாங்கள் பய­ணித்த வாகன சார­தியின் உத­வி­யுடன் மாற்­று­வீ­தியில் விமான நிலையம் நோக்கிச் சென்­றனர். அதன் பின்­னரும் பிர­தான வாயி­லுக்­கூ­டாக அவர்கள் செல்ல முடி­யவில்லை.

இதனால், விமான நிலை­யத்தை அண்­மித்­த­வுடன் தமது உடை­மை­க­ளுடன் நடந்து சென்ற மேற்­படி உத்­தி­யோ­கத்­தர்கள், விமா­ன­நி­லை­யத்தை சுற்றி அமைக்­கப்­பட்­டி­ருந்த முட்­கம்பி வேலிக்குள் புகுந்து தமது விமா­னத்தை அடைந்தனர்.

இவ்வாறு இவர்கள் விமான நிலையத்துக்குள் நுழைந்த காட்சிகள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.