முன்னாள் காதலியை பழிவாங்குவதற்காக இளைஞன் செய்த காரியத்தால் சிறைத் தண்டனை!!

648

பிரிட்­டனைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது முன்னாள் காத­லியின் மீது கொண்ட பொறா­மையால், காதலியின் வீட்டை உடைத்­துக்­கொண்டு புகுந்து, காத­லியின் உள்­ளா­டையை திரு­டி­யதன் கார­ண­மாக சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ளான்.

21 வய­தான கெய்லர் புரோபி எனும் இந்த இளை­ஞனும் 20 வய­தான குளோ றீஸ் எனும் யுவ­தியும் காதலித்­தனர். பின்னர் இவர்­களின் காதல் முறிந்­தது.

இரா­ணுவ சிப்­பா­யான ஆரோன் பொன்ட் என்­ப­வரை குளோ றீஸ் காத­லிக்க ஆரம்­பித்­ததால் கெய்லர் கடும் ஆத்­தி­ர­ம­டைந்தான்.

அதன்பின் குளோஸ் றீஸை பழி­வாங்கும் நட­வ­டிக்­கையில் கெய்லர் புரோபி ஈடு­பட்டான். குளோஸ் றீஸுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் கெய்லர் ஈடு­பட்­டதால், குளோஸ் றீஸி­ட­மி­ருந்து விலகியிருக்குமாறும் அவ­ருடன் தொடர்பு கொள்­வதை தவிர்க்­கு­மாறும் கெய்­ல­ருக்கு நீதி­மன்றம் உத்த­ர­விட்­ட­டி­ருந்­தது.

எனினும், இந்த உத்­த­ர­வு­களை மீறும் நட­வ­டிக்­கையில் கெய்லர் ஈடு­பட்­ட­தாக மீண்டும் வழக்குத் தொடுக்­கப்­பட்­டது. தனது முன்னாள் காதலி குளோஸ் றீஸின் வீட்­டுக்குள் புகுந்து குளோஸின் உள்ளாடையை திரு­டி­ய­தா­கவும் வேறு பல ஆடை­களை துண்டு துண்­டாக கத்­த­ரித்­த­தா­கவும் கெய்லர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது.

அத்­துடன், கெய்­லரும் அரோனும் பிக் அப் வாக­ன­மொன்றில் சென்­று­கொண்­டிருந்­த­போது குளோ றீஸ் மீது சுத்­தியல் ஒன்றை எறிந்­த­தா­கவும் கெய்லர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இவ்­ வ­ழக்கை விசா­ரித்த ஸ்வான்ஸ் கிரவுண் நீதி­மன்­ற­மா­னது, முந்­தைய உத்­த­ர­வு­களை விடுத்து கெய்லர் புரோப்­பிக்கு இரு வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்பளித்தது.

கெய்லர் புரோப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தான் பாதுகாப்பாக உணர்வதாக குளோஸ் றீஸ் நீதிமன்றிடம் தெரிவித்துள்ளார்.