பரபரப்பான போட்டியில் இலங்கை திரில் வெற்றி : தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது!!

464

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தீர்க்கமான இறுதி இருபது 20 போட்டியில் சீக்குகே பிரசன்னவின் அதிரடியுடன் திரில் வெற்றி பெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபது20 தொடரையும் கைப்பற்றியது.

கேப்டவுனில் இடம்பெற்ற இப்போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

நிதானமாக துடுப்பெடுத்தாடிய நிரோசன் டிக்வெல 68 ஓட்டங்களையும் அதிரடியாக துப்பெடுத்தாடிய சீக்குகே பிரசன்ன 37 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இப் போட்டி மற்றும் தொடரின் சிறப்பாட்டக்காரராக நிரோசன் டிக்வெல தெரிவுசெய்யப்பட்டார்.