வவுனியா உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!!

420

 
வவுனியாவில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன சற்றுமுன் நேரில் சென்று பார்வையிட்டார்.

காணாமல் போன உறவுகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் எனக் கோரி தொடர்ந்து நான்கு நாட்களாக காணாமல் போனோரின் உறவினர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் முன்னெடுத்துள்ளார்.

உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறையற்ற போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வவுனியாவிற்கு நேரில் வியஜம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உணவு தவிர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக எமது செய்திளார் தெரிவித்துள்ளார்.

இந்த உறுதி மொழியின் பிரகாரம் எதிர்வரும் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர், இராஜாங்க அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேிரில் கலந்துரையாடவுள்ளனர்.