இனிமேல் இப்படி செய்யமாட்டேன் : அரிசி திருடிய எலியை கட்டி வைத்து பதாகை மாட்டிய நபர்கள்!!

496

சீனா­விலுள்ள கடை­யொன்றில் அரிசி திரு­டி­ய­தாக கூறப்­படும் எலி­யொன்­றுக்குத் தண்­ட­னை­யாக, லொறி­யொன்றின் பின்னால் அதை கட்டித் தொங்­க­விட்­ட­துடன், இனிமேல் இப்­படி செய்­ய­மாட்டேன் என்ற அர்த்தம் தொனிக்கும் பதா­கை­யொன்­றையும் எலி மீது சிலர் மாட்­டி­யுள்­ளனர்.

சீனாவின் தென் பிராந்­திய நக­ரான ஹேயுவான் நகரில் அண்­மையில் இச்­சம்பவம் இடம்­பெற்­றது. மேற்­படி எலி, கடையில் அரசி திரு­டு­வதை சிலர் கண்­டு­பி­டித்­த­வுடன், அதற்கு இவ்­வாறு தண்­டனை அளிப்­ப­தற்கு தீர்­மா­னித்­த­னராம்.

தவறை ஒப்­புக்­கொள்ளும் வித­மான வாச­கங்கள் மஞ்சள் நிற அட்­டை­யொன்றில், எழு­தப்­பட்டு, எலியின் மீது தொங்­க­வி­டப்­பட்­டது. “உங்­களின் அரிசியை திரு­ட­மாட்டேன்”. இனிமேல் இப்­படி செய்­ய­மாட்டேன் என சத்தியம் செய்கிறேன்” எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது.