இந்திய இளைஞர் ஒருவர், வெளிநாட்டு பெண்ணை கடலுக்கு அடியில் கரம்பிடித்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் நிகில் பவார். இவர் கேரள மாநிலம் கோவளத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். இந்நிலையில் ஸ்லோவோகியா நாட்டைச் சேர்ந்த யுனிகா போக்ரான் என்பவர் கோவளத்திற்கு சுற்றுலா வந்த போது நிகில் பவாருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவருக்கும் இடையிலான இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சென்று பதிவுத் திருமணம் செய்து கொண்ட அவர்கள், திருமணத்தை கொஞ்சம் வித்தியாசமாக செய்ய நினைத்தனர்.
இதன் படி கடலுக்கு அடியில் சென்று திருமணம் செய்யலாம் என முடிவெடுத்து இதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இன்று கடலுக்கு அடியில் சென்று திருமணம் செய்து கொண்டனர்.
கடலில் பயணம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கூபா உடைகளை திருமண ஆடையாக மணமக்கள் இருவரும் அணிந்திருந்தனர்.
சங்குகளால் செய்யப்பட்ட மாலைகளை மாற்றியும் விரலில் மோதிரம் அணிவித்தும் திருமணம் செய்து கொண்டனர்.
இது இந்தியாவில் கடலுக்கு அடியில் நடந்த முதல் திருமணம் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.