வவுனியாவில் 36 பேருக்கு டெங்கு தொற்று : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

324

வவுனியாவில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்று (27.01.2017) வரையான காலப்பகுதியில் 36 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி கிசிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் 19பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

எனினும் இந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையிலே வவுனியாவில் 36 டெங்கு தொற்றுக்குள்ளாயுள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தற்போது கடந்த சில தினங்களாக மழையுடனான காலநிலையினையடுத்து ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்றுவரை 36 பேருக்கு டெங்கு தெற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதன் தாக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

மழை மேலும் நீடித்துச் சென்றால் இன்னும் பலருக்கு டெங்கு தொற்றுக்குள்ளாக நேரிடும், யாழ்ப்பாணம், மன்னார், போன்ற பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வவுனியாவில் இம்மாதம் மட்டும் 36 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளது.

அகில இலங்கை ரீதியில் இது இதிகமாகவே காணப்படுகின்றது. நகரை அண்டிய பகுதியிலுள்ளவர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் தோற்று ஏற்பட்டுள்ள இடங்களை இனங்கண்டு இருப்பிடங்கள், பொது இடங்கள், பாடசாலைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கவும்,

மேலும் சிரமதானப்பணிகளை முன்னெடுத்து டெங்கு நோயினைக்கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், கடந்த காலங்களில் பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினை வழங்குமாறும், எமது உத்தியோகத்தர்கள் களப்பணியினை மேற்கொண்டுள்ளனர், அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் குறிப்பாக நகரை அண்டிய பகுதிகளிலே பெருமளவானோர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

எனவே மேற்குறிப்பிட்ட இடங்களில் டெங்கு பெருக்கெடுக்காமல் வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.