சம்பியன்ஸ் தொடருடன் ஓய்வு பெறும் கிரிக்கெட்டின் ஜம்பவான்கள்!!

417

dravid_sachin300

சம்பியன்ஸ் லீக் T20 தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து சச்சின், டிராவிட் ஓய்வு பெறுகின்றனர். இதற்கு பின் கிரிக்கெட் களத்தில் இவர்களை வண்ண சீருடையில் காண இயலாது.

ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் செப்டம்பர் 21ம் திகதி தொடங்குகிறது. இந்தியா சார்பில் ஐ.பி.எல் தொடர் நடப்பு சாம்பியன் மும்பை, சென்னை, ராஜஸ்தான், அவுஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும்.

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெஸ்டில் பங்கேற்று வருகிறார். ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரராக உள்ளார். டிராவிட்டை பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுவிட்டார்.

ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு அணித்தலைவராக உள்ளார். இருவரும் தற்போதைய சம்பியன்ஸ் லீக் தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து முழுமையாக விடைபெற உள்ளனர்.

இத்தொடருக்குப் பின் சச்சின், டிராவிட்டை வண்ண சீருடையில், மைதானத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. இதனால் ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொடரில் பங்கேற்கும் மேலும் 2 அணிகளை தெரிவு செய்ய இன்று முதல் 20ம் திகதி வரை தகுதி போட்டிகள் நடக்கின்றன.
இதில் இந்தியாவின் ஐதராபாத், நியூசிலாந்தின் ஒடாகோ வோல்ட்ஸ், இலங்கையின் கந்துரட்ட மரூன்ஸ் மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் உல்வ்ஸ் என்று 4 அணிகள் விளையாடுகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் செப்டம்பர் 21ம் திகதி தொடங்கும் முக்கிய சுற்றுக்கு முன்னேறும்.