காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 2 தமிழக வீரகள் பலி : உருக்கமான தகவல்கள்!!

265

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் ராணுவத்தினர் பாதுகாப்பு முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர். அப்போது அதிகாலை நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதில் முகாமில் தங்கியிருந்த அனைவரும் புதையுண்டனர்.

விபத்தில் 14 ராணுவவீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 14 பேரில் தமிழகத்தின் தஞ்சையை சேர்ந்த இளவரசனும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் இளவரசனின் உறவினர்கள் மற்றும் கண்ணந்தங்குடி கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்த இளவரசனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண்பார்த்து வந்த நிலையில், அவரின் உயிரிழப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொருவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் பெயர் சுந்தரபாண்டியன் (வயது 27). திருமங்கலம் அருகே உள்ள பள்ளக்காப்பட்டியை சேர்ந்த சின்னசாமியின் மகன். இவருக்கு சுகப்பிரியா என்ற மனைவி உள்ளார். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இன்னும், 4 தினங்களில் ஊருக்கு வந்துவிடுவதாக மனைவியிடம் சுந்தரபாண்டியன் தொலைபேசியில் கூறியுள்ளார். இந்நிலையில் தான் அவர் பனிச்சரிவில் சிக்கி இறந்துள்ளார். சுந்தரபாண்டியன் இறந்த செய்தியை கேட்ட அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.