காதலன் கடித்ததால் உறைந்தது போன காதலியின் ரத்தம் : உயிரிழந்த சோகம்!!

611

காதலர்கள் என்றாலே அவர்களுக்குள் இருக்கும் செல்ல சண்டைகள் போல, செல்ல கடிகளும் இருக்கத்தான் செய்கின்றன. இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு விட்டால் கோபத்தில் செல்லமாக கடித்துக்கொள்வார்கள். இதற்கு “காதல் கடி” என்று பெயர்.

ஆனால், இந்த காதல் கடியால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இது நம்பமுடியாத விடயம் தான் என்றாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

நியூசிலாந்தில் காதலன் ஒருவன், தனது காதலியுடன் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஆசையாக தனது காதலியின் கழுத்தில் செல்லமாக கடித்துள்ளார்.

இதில், காதலியின் கழுத்தில் இரத்தம் உறைந்தததால் இரத்தம் ஓட்டம் பாதிக்கப்பட்டு தமனியானது சேதமடைந்துள்ளது. இதன் காரணத்தால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

உங்கள் தோலினை அதிகமாக அழுத்தினால் இரத்தம் உறைய வாய்ப்பிருக்கிறது. எனவே தான் இப்பெண்மணி உயிரிழந்துள்ளார்.