அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண் நினா தீவிரவாதியா??

322

The 2014 Miss America Competition - Show

அமெரிக்காவில் நடைபெற்ற அழகி போட்டியில் 24 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த நினா வெற்றி பெற்றார். ஆனால் அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

இந்தியாவில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை பூர்வீகமாக கொண்ட தெலுங்கு பெண் நினா. இவரது தந்தை அமெரிக்காவில் மகப்பேறு மருத்துவராக பணி புரிகிறார். அமெரிக்கர் அல்லாத பொன்னிற கூந்தல் இல்லாத, நீல நிறக்கண்கள் இல்லாத இந்திய வம்சாவளி பெண் நினாவை அழகு ராணியாக தேர்ந்தெடுத்ததை சிலர் விரும்பவில்லை.

நினாவை குறித்து டுவிட்டர் இணைய தளத்தில் பல்வேறு கருத்துக்களை சிலர் வெளியிட்டுள்ளனர். அவை இனவெறியை தூண்டுபவையாக உள்ளன. அவற்றில் சிலர் இவரை அரேபியர் என்றும் கூறியுள்ளனர். இவரை அமெரிக்கர் என எற்றுக்கொள்ள முடியாது என்றும், இவர் அழகியாக தேர்வு பெற்றதை நம்ப முடியவில்லை எனவும் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

இதில் ஒரு நபர் அரேபியர் ஒருவர் மிஸ் அமெரிக்கா ஆகிவிட்டார் என்றும் இவரை அல்-கொய்தா அமைப்புடன் தொடர்பு படுத்தி தீவிரவாதி எனவும் வர்ணித்துள்ளார். அல்-கொய்தாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் தங்களது எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் இவையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத நினா தனது செயலை சேவையின் மூலம் வெளிப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.