மும்பையில் பாடசாலை பேருந்து ஒன்றில் 4 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமி அளித்த தகவல்படி அந்த பஸ்ஸின் நடத்துனரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தானேவில் உள்ள ஒரு பாடசாலை பஸ் ஒன்றில் வகுப்பு முடிந்து 4 வயது சிறுமியும் அவளது தோழியும் அமர்ந்துள்ளனர். பிற மாணவர்களுக்கு வகுப்பு முடியாததால் இவர்கள் இருவர் மட்டுமே அந்த பஸ்ஸில் இருந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பஸ்ஸின் 26 வயது நடத்துனர் அந்த சிறுமியை பஸ்ஸின் கடைசி இருக்கைக்கு அழைத்துள்ளார்
சிறுமியும் அங்கு சென்றுவிட அந்த நபர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான். சிறுமியின் தோழி அவளை பாதுகாக்க முயன்றப்போது, நடந்தவற்றை யாரிடமாவது கூறினால் இரண்டு பேரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்
இதனால் பயந்துப்போன சிறுமிகள் இருவரும் யாரிடமும் இது குறித்து பேசவில்லை. இந்நிலையில் சிறுமியை உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் பாடசாலை பஸ்ஸின் நடத்துனரை கைது செய்யப்பட்டு அவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.