64 வருடங்களுக்குப் பின்னர் பிரான்ஸிலிருந்து பிரபஞ்ச அழகி!!

584

பிலிப்பைன்சின் மணிலா நகரில் நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில், பிரான்ஸ் அழகி ஒருவர் 64 வருடங்களுக்கு பிறகு பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வருடத்திற்கான பிரபஞ்ச அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்தது. இப்போட்டியில் 85 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக பல சுற்றுகளாக போட்டி நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இறுதி போட்டியில் பிரான்ஸ் நாட்டிலிருந்து 64 வருடங்களுக்கு பிறகு 24 வயதான ஐரிஷ் மிட்டனெரே, பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டாம் இடத்தை ஹெய்டி அழகி ராகுயில் பெல்லிஸிரும், மூன்றாம் இடத்தை கொலம்பிய அழகி அண்ட்ரியா டோவரும் பெற்றுள்ளனர்.

பிரபஞ்ச அழகிய தெரிவானவர் பிரான்ஸ் பல்மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டில் படிப்பவராவார். மேலும் இரண்டாம் இடத்தை பெற்ற ஹெய்டி அழகி ராகுயில் பெல்லிஸி 2010 ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்திலிருந்து உயிர் தப்பியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.