சோதனைகளை சாதனை படிக்கட்டாக்கி சரித்திரம் படைத்த கல்லூரி மாணவி!!

318

பெங்களூர் பல்கலைகழகத்தில் படித்து வருபவர் சவுஜனா. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலிடம் பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

ஆனால் இந்த முறை முதுகலை படிப்பில் புதிய சாதனை படைத்துள்ளார். முதுகலை படிப்பில் 8 தங்கப் பதக்கமும், பணப்பரிசையும் வென்றுள்ளார்.

52வது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்த பரிசு அவருக்கு வழங்கவிருக்கிறது. இந்த சாதனைகளுக்கு பின்னால் அவருக்கு மிகப்பெரிய சோதனைகளும் நடந்துள்ளன.

7 வருங்களுக்கு முன்பு சவுஜனா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவிருந்த சமயத்தில் அவரது கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெரிய அடி ஒன்று விழுந்தது.

அவரது தந்தை திடீரென இறந்துவிட்டார். அவரை நம்பி மட்டுமே இருந்த குடும்பம் ஆதரவற்று தவித்தது. சவுஜனா கனவும் சுக்கு நூறாக நொறுங்கியது.

இந்நிலையில் சவுஜனாவின் படிப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்த அவரது தாய் வேலைக்கு போக முடிவு செய்தார்.

இதன் படி அவர் வேலைக்கு போய் சவுஜனாவை படிக்க வைத்தார். தனது தாயின் கஷ்டத்தை உணர்ந்த சவுஜனாவும் படிப்பில் முழுகவனம் செலுத்த ஆரம்பித்தார். இதன் பலனாக தற்போது சாதித்துள்ளார்.

PhD மற்றும் IAS ஆக வேண்டும் என்பதே தனது அடுத்த குறிக்கோள் என்று கூறிய சவுஜனா, அதற்காக கடினமாக உழைக்க தயாராகிவிட்டதாக நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.