இலங்கையில் கடலில் உருவாகும் பிரம்மாண்டமான நகரை பார்க்க வேண்டுமா : அரிய புகைப்படங்கள்!!

217

 
கொழும்பு காலிமுகத்திடலில் உருவாகி வரும் போர்ட் சிட்டி (துறைமுக நகரத்திட்டம்) அமைப்பதற்காக கடலுக்குள் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலுக்குள் நிலப்பரப்பை உருவாக்கும் செயற்பாடுகளுக்காக மணல் அகழும் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு பெரும் பகுதிகள் தற்போது நிரப்பப்பட்டுள்ளன.

இதற்காக கடலில் இருந்து 28 வீத நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நிலப்பரப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் உள்வாங்கப்பட்டு விடும் என்றும் அண்மையில் சீன துறைமுக பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு கடலை மணல் கொண்டு நிரப்பி அமைக்கப்படும் போர்ட் சிட்டி தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றன.

மேலும் நிரப்பப்பட்ட பகுதிகளில் பல கனரக வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமானப்பணிகளுக்கான பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.

பல எதிர்ப்புகள் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் போர்ட் சிட்டியின் நிர்மாணப்பணிகள் வெற்றிகரமான முறையிலும், மிக பிரம்மாண்டமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.