ஜேர்மன் விமான நிலையத்தில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

851

ஜேர்மன் விமான நிலையம் ஊடாக பரிஸ் நகருக்கு சென்ற பெண்ணொருவருக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த 33 வயதான காயத்ரி போஸ், பிராங்க்போட் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காயந்திரி ஜேர்மனியின் பிராங்க்போட் நகரிலிருந்து பாரிஸ் நகர் செல்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு இவரை சோதனை செய்து பார்த்த போது, உள்ளே கருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கருவியை எடுத்து பார்த்த போது, குழந்தைகளுக்கு பாலுட்டும் Breast Pump என்பது தெரியவந்தது.

இதை எதற்காக வைத்துள்ளீர்கள்? உங்களுடைய குழந்தை எங்கே? சிங்கப்பூரிலா இருக்கிறார்கள்? என பல கேள்விகளை கேட்டுள்ளனர்.

3 வயது மற்றும் ஏழு மாத குழந்தைக்கு தாயான காயத்ரி போஸின் விளக்கங்களை அதிகாரிகள் காதுகொடுத்து கேட்கவில்லை.

உடனடியாக பெண் அதிகாரிகளால் தனி அறைக்கு அழைத்து செல்லப்பட்ட காயத்ரி போஸிடம், குறித்த கருவியை பயன்படுத்தி குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது என்பதை நடித்துக் காட்ட கூறியுள்ளனர்.

அனைவரின் முன்னிலையில் சங்கடப்பட்ட காயத்ரி போஸ் வேறு வழியில்லாமல் செய்து காட்டியுள்ளார்.

சுமார் 45 நிமிடங்கள் சோதனைக்கு பிறகே காயத்ரி போசுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் மிகுந்த மன வேதனை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய காயத்ரி போஸ் முடிவு செய்துள்ளார்.