அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் மாமரத்தில் ஏறி மாங்காய் பறிக்கமுற்பட்ட போது தவறிக் கீழே வீழ்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பள்ளிக் குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த இந்தச் சிறுவன், வீட்டுக்கு அண்மையில் உள்ள தனியார் காணிக்குள் உள்ள மாமரத்தில் மாங்காய் பறிப்பதற்காக ஏறிய போது கீழே தவறி வீழ்ந்து பலத்த காயமடைந்துள்ளார்.






