ஒரு மணி நேரத்தில் 120,000 கோடியை ஏப்பம் விட்ட ட்ரம்பின் திட்டம் : தள்ளாடும் இந்திய நிறுவனங்கள்!!

265

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் H1B விசா மீதான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் அந்நாட்டு பாராளுமன்றில் மசோதா ஒன்றை சமர்பித்துள்ளது.

ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் முன்னிலை வகிக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 120,000 (இலங்கை ரூபா) கோடி வரையில் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சுமார் 120,000 கோடி வரையில் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

H1B விசாவில் திருத்தம் செய்யப்பட்ட மனு அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அரசாங்கத்தின் புதிய விசா கொள்கையின் படி H1B விசாவில் வேலைக்கு வருபவர்களின் குறைந்த பட்ச ஊதியம் 130,000 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

60,000 டொலராக காணப்பட்ட இந்த தொகை, தற்போது இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், இந்த ஊதிய உயர்வை வழங்குவதில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில், H1B விசாவில் அமெரிக்காவில் பணி புரியும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்பதால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைத் மீள அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, டொனால்ட் ட்ரம்பின் இந்த நடவடிக்கையின் காரணமாக ஆசியாவின் ஏனைய வளர்ந்துவரும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.