இலங்­கையில் புற்றுநோய் காரணமாக தினம் 4 தொடக்கம் 9 பேர் இறக்கின்றனர்!!

237

தொற்றா நோய் வரி­சையில் மிக முக்­கி­ய­மான இடத்தை புற்­று­நோ­யா­னது பிடித்­துள்­ளது. இலங்­கையில் புற்று நோய் கார­ண­மாக ஒரு நாளுக்கு நான்கு தொடக்கம் ஒன்­பது பேர் வரை இறக்­கின்­றனர் என்று பதில் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் ஜே.எம்.டபிள்யூ. ஜய­சுந்­தர பண்­டார தெரி­வித்தார்.

பெப்­ர­வரி 04 ஆம் திகதி உலக புற்­றுநோய் தினம் அனுஷ்­டிக்­கப்­படு­கி­றது. இதனை முன்­னிட்டு நேற்று சுகா­தார,போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்..

உலகம் முழு­வதும் ஏழில் ஒரு மர­ணத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற கார­ணி­யாக புற்­றுநோய் காணப்­ப­டு­கின்­றது. உலக புற்­றுநோய் அறிக்­கை­யா­னது 14.1 மில்­லியன் புதிய புற்­று­நோ­யா­ளர்கள் கண்­டுப்­பி­டிக்­கப்­பட்டு பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் ஆண்டு தோரும் 8.2 மில்­லியன் மக்கள் புற்­று­நோ­யினால் இறக்­கின்­றனர் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த ஆண்டும் உலக புற்­றுநோய் தின பிர­சார தொனிப்­பொ­ரு­ளாக “என்­னால்­மு­டியும், நம்மால் முடியும்” என்­பது உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த தொனிப்­பொ­ரு­ளு­ட­னான 2017 ஆம் ஆண்­டுக்­கு­ரிய உலக புற்­றுநோய் தினம், புற்­று­நோய்க்­கு­ரிய சிகிச்சை தீர்­வு­களை கண்­ட­றி­யவும் இதற்­கெ­தி­ரான போராட்­டத்தில் ஒரு உயிர்ப்­பான அணு­கு­மு­றையை கையா­ளவும் வழி­வ­குக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

இலங்­கையை பொறுத்தமட்டில் கடந்த காலங்­களை விட தற்­போது புற்­று­நோயால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் தொகை அதி­க­மா­கி­யுள்­ளது. இதில் ஆண்­க­ளுக்கு பொது­வாக வாய்­குழி,தொண்டை,வாத­னாளி, நுரை­யீரல் போன்­ற­வற்றில் புற்­றுநோய் ஏற்­ப­டு­கின்­றது இதற்­கு­ பு­கை­யிலை, புகைப்­பி­டித்தல், மது, பாக்­கு­வ­கை­கள்­ ஆ­கி­ய­வற்றின் பாவனை கார­ணங்­க­ளாக அமை­கின்­றன.

பெண்கள் மார்­பக புற்­றுநோய்,கருப்பை கழுத்து புற்­று­நோ­யினால் அதிகம் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இதற்­கான பிர­தான கார­ண­மாக உடல் எடை அதி­க­ரிப்பு, பாலியல் தொற்­றுக்கள் என்­பன உள்­ளன.

புற்­று­நோயை இழி­வ­ள­வாக்­கு­வ­தற்கு நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு வேளைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. கராப்­பிட்­டிய, குரு­ணாகல், இரத்­தி­ன­புரி, கண்டி ஆகிய பிர­தே­சங்­களில் புற்­றுநோய் சத்­திர சிகிச்­சைக்­கான விசேட ஏற்­பா­டுகள் மேற்­கொள்ளப்­ப­ட­வுள்­ளன.

புற்­று­நோயை கட்­டுப்­ப­டுத்த மது­சாரம்,புகை­யிலை,பாக்கு வகை போன்­ற­வற்றில் அர­சாங்கம் தடை­களை வலுப்­ப­டுத்த வேண்டும். இரசாயன பாவனைகளை உணவு உற்பத்தியில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் அதிக உரைப்பான, சூடான உணவுகளை உண்பதை தவிர்த்துக் கொள்வது அவசியமாகும். இரசாயனம் கலந்த உணவுப் பாவனையை தவிர்ப்பதனாலும் புற்றுநோயை இழிவளவாக்க முடியும் என்றார்.