65 ரூபாவுக்கு அரிசி விற்கப்படவில்லை : பதுக்கலில் மொத்த விற்பனையாளர்கள்!!

216

அரிசி விலை குறைக்கப்பட்டுள்ளபோதும், அதன் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடையவில்லைஎன நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரிசி விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கமைய அரிசிவிற்பனைநடைபெறவில்லை. நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதியமைச்சர்ரவிகருனாநாயக்கா இவ்வாறு தெரிவித்தார்.

சில அரிசி மொத்த விற்பனையாளர்களின் மோசடிச் செயற்பாடுகள் காரணமாகவேஅரிசிக்கான விசேட சுங்க வரி குறைக்கப்பட்டது. இருப்பினும், அதன் நன்மைகள் பொதுமக்களை சென்றடையவில்லை.

அரிசிக்கு தட்டுப்பாட்டு ஏற்படுவதை தடுப்பதற்காகவே அரிசியை இறக்குமதி செய்வதற்குஅரசாங்கம் தனியாருக்கு அனுமதி வழங்கியது.

அரிசிக்கு விதிக்கப்பட்ட விசேட சுங்கவரியும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய குறைக்கப்பட்டது.இரண்டு கட்டங்களாக இவை குறைக்கப்பட்டன.

முதலில் ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டது.இதன்போது 76 ரூபாவுக்கு அசிரியை விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் 10 ரூபாவால் அரிசியின் விலை குறைக்கப்பட்டது. ஆனால், அரிசியைஎவ்வளவு விலைக்கு விற்க வேண்டும் என் இதன்போது அறிவிக்ககப்படவில்லை.

வரி குறைக்கப்பட்ட பின்னர் ஒரு கிலோ அரிசியை 65 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும்.இருப்பினும் மொத்த விற்பனையாளர்கள் கூடிய விலைக்கே அரிசியை தற்போது விற்பனைசெய்கின்றனர்.

இதுவரை 23 ஆயிரத்து 800 மெற்றின் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தஅரிசி விற்பனையாளர்கள் தமது இருப்பிலிருந்த அரிசியை பதுக்கியுள்ளனர்.

அரிசி விலை குறைக்கப்பட்டதன் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடையவில்லை. இதுதொடர்பில் நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நிதி அமைச்சர்ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.