சச்சினின் 200வது டெஸ்டில் நீடிக்கும் மர்மம்!!

298

Sachin-Tendulkar

சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடித்த இந்திய அணியின் சச்சின் 198 டெஸ்டில் 15,837 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அட்டவணைப்படி தென் ஆப்ரிக்க மண்ணில் சச்சின் தனது 200 டெஸ்ட் போட்டியை விளையாடும் நிலை இருந்தது.

ஆனால் சொந்த மண்ணில் விளையாடும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை புதிய ஏற்பாடுகளை செய்தது. இதன்படி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இந்தியா வருமாறு மேற்கிந்திய தீவுகள் அணியை அழைத்தது.

இப்போட்டிகள் கொல்கத்தா (ஈடன் கார்டன்), மும்பையில் (வான்கடே) நடக்கவுள்ளன. ஆனால் இரண்டு கிரிக்கெட் சங்கங்களும் தங்களது மண்ணில் தான் சச்சினின் 200 வது டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இது குறித்து ராஜிவ் சுக்லா கூறுகையில் இந்தியாவிலுள்ள பல்வேறு கிரிக்கெட் சங்கங்கள் வரலாற்று சிறப்பு மிக்க சச்சினின் 200 வது டெஸ்ட் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து வருகின்றன. இதில் கொல்கத்தா மும்பை கடும் போட்டியில் உள்ளன.

இதில் ஈடன் கார்டனில் ஒரு லட்சம் பேர் வரை காணலாம். வான்கடே மைதானத்தில் 65 000 பேர் வரை பார்க்க முடியும். இதனால், போட்டியை எங்கு நடத்துவது என பி.சி.சி.ஐ இன்னும் முடிவு செய்யவில்லை.

அதேநேரம் கான்பூரில் 30 000 ரசிகர்கள் மட்டும் தான் அமரமுடியும் என்பதால் இங்குள்ள கிரீன் பார்க் மைதானத்தில் டெஸ்ட் நடத்துவதில் விருப்பம் இல்லை என்றும் இதற்குப் பதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியை நடத்த அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.