பொது இடங்களில் முத்தம் கொடுத்தால் அபராதம் : ஒஸ்ரியாவில் உத்தரவு!!

319

kiss

ஒஸ்ரியா தலைநகர் வியன்னாவில் பஸ், ரயில்களில் முத்தமிடுவது, போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது போன்றவைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமுல்படுத்தியுள்ளது.

பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுமாம்.
ரயில்கள், பேருந்துகளில் ஜோடிகளாகப் போவோர் மிகவும் நாகரீகமாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தம்பதிகள் நெருக்கமாக அமருவது, உதட்டு முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வியன்னாவில் பொதுப் போக்குவரத்தை வியனர் லினியன் என்ற நிறுவனம்தான் கவனிக்கிறது. இந்த நிறுவனத்திற்கு நிறையப் புகார்கள் வந்ததாம்.

அதில் பொது போக்குவரத்து வாகனங்களில் முத்தம் கொடுப்போரால் பெரும் சங்கடம் ஏற்படுவதாக மக்கள் குமுறியிருந்தனராம்.
அதேபோல செல்போன்களில் படு சத்தமாக பேசுவதையும் தடை செய்துள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடையூறாக இருப்பதால் இந்த தடை. இனிமேல் மெதுவாகத்தான் செல்போனில் பேச வேண்டுமாம்.

அதேபோல சீனச் சாப்பாடு, பாஸ்ட் புட், கபாப் போன்றவற்றை ரயில்கள், பஸ்களில் வைத்து சாப்பிடுவதற்கும் தடை போட்டு விட்டனர்.
இந்த உத்தரவுகளை கண்காணிக்கவும் தவறு செய்வோரைக் கையும் களவுமாக பிடிப்பதற்கும் ஆட்களை நியமித்துள்ளனராம்.

இதேபோல பலர் திடீரென ஆடைகளை கழற்றிப் போட்டு நிர்வாணமாக காட்சி தருவதும் அங்கு சகஜமாகும். அதற்கும் தடை விதித்துள்ளனர்.
இன்னொரு முறை ஒரு நபர் தான் வளர்த்து வரும் குதிரையுடன் ரயிலில் பயணித்து அத்தனை பேரையும் டென்ஷனாக்கினாராம்.