89 வய­திலும் தொடர்ந்து பணி­யாற்றும் சத்­தி­ர­சி­கிச்சை நிபுணர்!!

600

ரஷ்­யாவைச் சேர்ந்த மருத்­து­வ­ரான பெண் ஒருவர் 89 வய­திலும் மருத்­துவ சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்கிறார்.  டாக்டர் எலா இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா எனும் இப்பெண், உலகில் தற்­போதும் பணியாற்றும் மிக வய­தான சத்­தி­ர­சி­கிச்சை நிபுணர் எனக் கரு­தப்­ப­டு­கிறார். எதிர்­வரும் மே 5 ஆம் திகதி டாக்டர் எலா இலி­யி­னிச்னா லெவுஷ்­கி­னா­வுக்கு 90 வய­தா­க­வுள்­ளது.

இந்­நி­லை­யிலும் அவர் வரு­டாந்தம் நூற்­றுக்கும் அதி­க­மான சத்­தி­ர­சிகிச்சைகளை செய்­கிறார்.
ரஷ்­யாவின் ரைஸான் நகர வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்றும் இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா வாராந்தம் குறைந்­த­பட்சம் 4 சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்­கிறார்.

மருத்­து­வ­ராக பணி­யாற்ற வேண்டும் என சிறு பருவத்­தி­லி­ருந்தே இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா விரும்பி­னாராம். இவர் ஓய்வு பெறும் வயதை கடந்து பல தசாப்­தங்­க­ளா­கி­விட்ட போதிலும் தனது அபி­மான பணி­யி­லி­ருந்து விலக விரும்­ப­வில்லை.

தினமும் காலை 8 மணிக்கு இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா வேலைக்குச் சென்­று­வி­டு­வாராம்.  கடந்த 67 வரு­டங்­களில் 10,000 இற்கும் அதி­க­மான சத்­தி­ர­சி­கிச்­சை­களை இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா செய்திருக்­கிறார்.

இச்­சத்­தி­ர­சி­கிச்­சை­களில் ஒரு­வர்­கூட இறக்­க­வில்லை என்­பதில் மிகப் பெரு­மிதம் கொண்­டுள்ளார் டாக்டர் இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா.  தனது வீட்டில் மாற்றுத் திற­னா­ளி­யான தனது மரு­ம­க­னையும் இலி­யி­னிச்­னாவே பரா­ம­ரித்து வரு­கிறார். 8 பூனைக­ளையும் வளர்க்­கிறார்.

“ஓய்வு காலத்தில் நான் செய்­வ­தற்கு வேறு எது­வு­மில்லை. மருத்­துவர் என்­பது ஒரு தொழில் அல்ல. இது ஒரு வாழ்க்கை முறை” என்­கிறார் டாக்டர் இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா.

தனது ஆரோக்­கி­ய­மான நீண்ட வாழ்க்கை தொடர்பில் இர­க­சியம் எது­வு­மில்லை எனவும் இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா கூறு­கிறார். “நான் எல்­லா­வற்­றையும் உண்­கிறேன். அதிகம் சிரிக்­கிறேன், அதிகம் அழு­கிறேன்” என இவர் கூறு­கிறார்.

“நான் இன்னும் ஏன் பணி­யாற்­று­கிறேன் என்றால், இதில் நான் ஆர்வம் கொண்­டுள்ளேன். அத்­துடன், வெற்றி பெறு­வதை நான் விரும்­பு­கிறேன். மக்கள் குண­ம­டை­வ­தற்கு உத­வுவதை நான் விரும்­பு­கிறேன்.

பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் வேறு எவரும் சத்­தி­ர­சி­கிச்சை செய்ய முன்­வ­ராத நிலையில் இருந்த பல­ருக்கு நான் சத்­தி­ர­சி­கிச்சை செய்து இவர்­களை காப்­பாற்­றி­யுள்ளேன்.

அவர்கள் இன்னும் உயி­ருடன் உள்­ள­துடன் வளர்ந்த பிள்­ளை­க­ளையும் கொண்­டுள்­ளனர்” என்­கிறார் டாக்டர் டாக்டர் இலியினிச்னா லெவுஷ்கினா.