டுபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இரு இலங்கையர்கள் கைது!!

508

arrest1

டுபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் சென்ற இரு இலங்கையர்கள் கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயிலிருந்து மும்பை வழியாக நேற்று கோவா பனாஜி விமான நிலையத்தை சென்றடைந்தது. அப்போது விமானப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்தே விமானத்தில் உள்ளே சோதனை மேற்கொண்டனர்.

இதில் ஆசனத்திற்கு அடியில் கார்பன் பேப்பர் சுற்றி மறைக்கப்பட்டிருந்த இரு பைக்கற்றுக்களை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அதன் ஒவ்வொரு பைக்கற்றுகளில் இருந்தும் ஒரு கிலோ எடையுள்ள ஆறு தங்கக்கட்டிகள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் பெறுமதி இந்திய ரூபாவில் 3.60 கோடி என தெரியவந்துள்ளது.



இதை துபாயிலிருந்து இந்தியாவிற்கு கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த இருவரை அதிகாரிகள் கைதுசெய்தனர். இதுபோன்று கடந்த மாதம் இரு பயணப் பையில் கடத்திவரப்பட்ட தங்ககட்டிகளை இலங்கையை சேர்ந்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

புதிய முறைகளில் கடத்திவரப்படும் பொருட்களை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி அதிகாரி தெரிவித்தார்.