மனிதனின் தவறைத் திருத்திய இயற்கை!!

381

 
ரஷ்யாவின் உஸுரி வளைகுடா மிக அழகானதோர் பகுதி. ஒரு காலத்தில் அருகில் இருந்த தொழிற்சாலைகளிலிருந்து தேவையற்ற கண்ணாடிப் போத்தல்கள் இந்தக் கடற்கரையில் அளவுக்கு அதிகமாகக் கொட்டப்பட்டன.

உடைந்த கண்ணாடிகள் நிரம்பிய பகுதி என்பதால், மனிதர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. காலங்கள் சென்றன. கூர்மையான உடைந்த கண்ணாடி துண்டுகள் எல்லாம் நீரால் அரிக்கப்பட்டு, கூழாங்கற்களைப் போன்று வழவழப்பாகி விட்டன.

சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை என்று அத்தனை கண்ணாடித் துண்டுகளும் தற்போது கற்கள் போல உருமாறி, கரைக்கு வந்து சேர்கின்றன. கடற்கரை முழுவதும் வண்ணக் கண்ணாடிக் கற்களால் அழகாகக் காட்சியளிக்கிறது.

இந்தப் பகுதியைக் காண்பதற்காக உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் செல்கின்றனர்.

கரைகளில் ஒதுங்கும் கண்ணாடிக் கற்களை சேகரிப்பதற்கும் சற்றுத் தொலைவில் உறைந்திருக்கும் பனிப்பாறைகளைப் புகைப்படம் எடுப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

மனிதன் செய்த தவறை அழகாய்த் திருத்தியிருக்கிறது இயற்கை.