கிளிநொச்சி கோணாவில் பகுதியில் சிறுமியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபரை அடையாளம் காட்டுபவர்களுக்குத் தமது சொந்தப் பணத்தில் ஒரு லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் அறிவித்துள்ளார்.
கோணாவில் பகுதியில் நேற்று முன்தினம் ஏழு வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
இதுவரை சுமார் 510 சிறுமிகள் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது பாரிய ஒரு கலாசாரச் சீரழிவாகும்.
இவ் வாறானவர்களை அடையாளம் கண்டு சமூகத்தில் வெளிக்கொணரப்பட வேண்டும். ஆகவே சந்தேக நபரை யாராவது அடையாளம் காட்டினால் அவரை சட்டத்தில் முன்நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அடையாளம் காணபிப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும் என்று கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார்.