தமிழ் மொழியில் இயங்கும் Galaxy Note 3!!

367

gaசம்சங் நிறுவனம் கலக்ஸி நோட் 3 மற்றும் கலக்ஸி கியர் ஸ்மாட் கடிகாரத்தை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த கலக்ஸி நோட் 3யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகும். சம்சங் கலக்ஸி நோட் 3யின் விலை 49 990 இந்திய ரூபாய் ஆகும்.

கலக்ஸி கியர் ஸ்மாட் கடிகாரத்தின் விலை 22 990 இந்திய ரூபாய் ஆகும். 5.7 இன்ஞ் 1080p சூப்பர் அமோலட் பனல் கொண்ட கலக்ஸி நோட் 3, 1.9GHZ எக்ஸ்னோஸ் அக்டா கோர் பிரசஸர் உடன் வந்துள்ளது.

13 மெகாபிக்சல் கமரா, 2 மெகாபிக்சல் Front கமெரா உள்ளன. அன்ரொய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கலக்ஸி நோட் 3யில் 3ஜிபி ரம் உள்ளது.

கேலக்ஸி நோட் 3யில் 4K வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32 GB மற்றும் 64GB சேமிப்பு அளவுகளில் கிடைக்கிறது.

wa