தனது அறையை அலங்கோலமாக வைத்திருந்த யுவதி ஒருவரின் காலில் தொலைபேசி சார்ஜர் கம்பியொன்று ஊடுருவிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
நெப்ரஸ்கா மாநிலத்தில் வசிக்கும் 18 வயதான ஜூலியான பெக்கர் எனும் இந்த யுவதியின் அறையில் ஆடைகள் மற்றும் பொருட்கள் தரையை மூடி யிருந்தன.
இந்நிலையில், ஜூலியா அண்மையில், கட்டிலிலிருந்து, அவசரமாக எழுந்து செல்ல முற்பட்டபோது தரையிலிருந்த தொலைபேசி சார்ஜரின் கம்பி யொன்று அவரின் பாதத்தில் குத்தி உள்ளே புகுந்தது.
அதன்பின் ஜூலியா வலியால் அலற, அவரின் தாயார் வந்து, சார்ஜரை பாதத்திலிருந்து எடுத்தாராம். இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்க ளையும் ஜூலியா வெளியிட்டுள்ளதுடன், தனது பாதத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இப் புகைப்படங்களை பார்த்த பலர், “இளைஞர் யுவதிகளே உங்கள் அறையை சுத்தம் செய்யுங்கள் இல்லாவிட்டால் இப்படி நடக்கலாம்” என அறிவுரை கூறியுள்ளனர்.








