வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

531

 
வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒன்றினைந்து இன்று (07.02.2017) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் தொழிற்சங்க கூட்டு முயற்சியில் சம்மேளனங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சரியான முறையில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் இன்றைய நாளில் அகில இலங்கை ரீதியாக உள்ள பல்கலைக்கழகங்கள் கல்விசாரா உழியர்கள் இணைந்து ஒரு அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் அரசாங்கம் தமது தவறுகளை உணர்ந்து எங்களுக்கு உரிய தீர்வினை தராதபட்சத்தில் ஏற்கனவே அவர்கள் வாக்குறுதி அளித்த வாக்குறுதிகளை தவறவிட்ட காரணத்தினால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தொடர்ச்சியான வாக்குறுதிகளை அளித்து தவறும் பட்சத்தில் எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் நாங்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்த்தினை முன்னெடுக்கவுள்ளோம் என்று அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருபவரும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டுக்கான பாதீட்டில் உறுதியளித்தவாறு வேதன உயர்வு வழங்கப்படவில்லையென தெரிவித்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடுதழுவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.