வவுனியாவில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!!

747

 
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கடந்த 04.02.2017 ஞாயிற்றுக்கிழமை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில் தங்களை புலனாய்வு பிரிவினர் என அடையாளம் காட்டி வீட்டை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து அதன் பின்னர் கத்தியினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம்,பூவரசங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை ( 38,22,45 வயதுடைய ஆண்கள்) வவுனியாவில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.02.2017) கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து புலனாய்வு பிரிவினரின் தொப்பி ஒன்று , கத்தி ஒன்று , தங்க நகைகள் , கருப்பு சட்டை ஒன்று, தொலைபேசி மூன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

15, 35500 ரூபா களவாடப்பட்டதாகவும் ஐந்து வீட்டில் தாங்கள் களவாடியதாகவும் சந்தேகநபர் ஒத்துக்கொண்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மூவரும் இன்று (07.02.2017 வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபடவுள்ளனர்.