காலி பிரதேசத்திலுள்ள 28 வயதான ஆண் ஒருவர் பெண்ணாக மாற ஆசைப்பட்டு, அதற்காக பெண்கள் ஓமோன் வில்லைகளை உட்கொள்வ தற்காக உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியரிடம் ஆலோசனைகளை கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பெண்கள் ஓமோன் வில்லைகளை உட்கொள்ளும் பொருட்டு குறித்த நபர் விசேட வைத்திய நிபுணர் கொல்வின் குணரத்னவிடம் ஆலோசனைகளை கேட்டுள்ளார்.
அதன்போது, முறையற்ற விதத்தில் குறித்த ஓமோன் வில்லைகளை உட்கொள்ள வேண்டாம் என அவ்வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல நிபுணர் ரவீன் ஹங்வெல்லவை சந்திப்பதற்கு நாளொன்றை ஒதுக்கிக் கொள்வது இதற்கு மிக சிறந்த தீர்வாகும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த மனநிலையின் காரணமாக பெண்கள் ஆடைகளை அணிந்து கொள்ளவிரும்பினால், அதனை தங்களுடைய அறையுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என மேலும் அந்நபருக்கு வைத்திய நிபுணர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறு பெண்கள் ஆடைகளை அணிந்து கொள்ள விரும்புவதனை அறையுடன் மட்டுப்படுத்துமாறு கூறிவதற்கான காரணம், சமூகம் மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடமிருந்து ஏற்படும் கெடுபிடிகளை நீக்கி கொள்ளவதற்கேயாகும் என அவ்வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.






