வடக்கு தேர்தல் இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்ல சந்தர்ப்பம் : பான் கீ மூன்!!

485

pankimoon

எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி இடம்பெறும் வட மாகாண சபைத் தேர்தல் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஒன்று என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து பான் கீ மூன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி இடம்பெறவுள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில் 1987ம் ஆண்டுக்குப் பின் தேர்தல் நடைபெறவுள்ளது.



இத்தேர்தலானது அரசியல் நல்லிணக்கம் மற்றும் இலங்கையர்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் மிக முக்கிய வாய்ப்பாக அமையும்.

அனைத்து கட்சிகளும் தேர்தலில் அமைதியான முறையில் பங்குபற்ற வேண்டும். யுத்தத்தின் பின்னரான காலத்தில் ஒன்றிணைந்து கூட்டாக, ஆக்கபூர்வமாக பணியாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என பான் கீ மூன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.