பெண் ஊழியரிடம் சேஷ்டை செய்த தொழிலதிபரை வித்தியாசமாக தண்டித்த நீதிபதி!!

399

judge

பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு வித்தியாசமான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் குர்கானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் நிறுவனத்தில் ஆர்கே புரத்தில் வசித்து வரும் பெண்ணொருவர் கடந்த 2012 டிசம்பர் முதல் வேலை செய்து வந்தார்.

இவரிடம் அந்த தொழிலதிபர் அடிக்கடி தவறாக நடந்துகொள்ள முயன்றதை தொடர்ந்து 2013 மார்ச் மாதம் அந்நிறுவனத்தில் இருந்து நின்றுவிட்டார். இதையடுத்து குறித்த பெண் வேறொரு நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 29ம் திகதி வீட்டில் அந்தப் பெண் தனியாக இருந்த நேரம் பார்த்து தொழிலதிபரும் வந்தார். அவளின் ஆடைகளை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தார்.



அநதப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதைக்கண்ட தொழிலதிபர் அங்கிருந்து தப்பியோடினார். இதுபற்றி அந்தப் பெண் பொலிசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த பொலிசார் தொழிலதிபரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர் பிணையில் வெளியே வந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி விசாரித்து வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது,

பெண் வீட்டில் தனியாக இருந்தபோது தொழிலதிபர் அத்துமீறி உள்ளே நுழைந்து சில்மிஷம் செய்திருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயல் செய்ததற்கு நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கடிதமும் வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ6 லட்சம் நிவாரண தொகை தருவதாக தொழிலதிபர் நீதிமன்றத்துக்கு வெளியே ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சமரசம் எற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் செய்த குற்றத்துக்காக 2 லட்சம் அபராதம் விதிக்கிறேன்.

அந்த தொகையை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்களுக்கான நூலகம் மற்றும் டெல்லி பொலிஸ் நலவாழ்வு சங்கத்துக்கு பிரித்து தரவேண்டும். இதுமட்டும் அல்லாது ஒரு பாடசாலையில் உள்ள வகுப்பறைகளுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான அறைவாசனை திரவியங்கள் மற்றும் தேவையான பொருட்களை அவர் வாங்கித்தர வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.