டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தாயொருவர் ஒரே சூழில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக டிக்கோயா வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மஸ்கெலியா சாமிலை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய புஸ்பலதா என்ற தாயே இவ்வாறு மூன்று குழந்தைகளை பெற்றுள்ளார்.
பிரசவத்திற்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (08.02.2017) மாலை வைத்திய அதிகாரிகளினால் சீசேரியன் முறையில் ஒரே சூலில் இருந்த மூன்று ஆண் சிசுக்களையும் தாயின் வயிற்றிலிருந்து பாதுகாப்பாக பிரசவிக்க செய்துள்ளனர்.
தோட்ட தொழிலாளியின் மனைவியான குறித்த தாயிற்கு 11 வயதுடைய ஆண்குழந்தையும் 7 மற்றும் 5 வயதுடைய பெண் குழந்தையுமாக மூவர் உள்ளதாகவும் தற்போது மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ள நிலையில் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.
தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்திய அதிகரிகள் தெரிவித்தனர்.






